சாலையிலேயே நின்று பர்தாவை கழற்றிய ஆசிரியை! பெரும் சலசலப்பை கிளப்பிய வீடியோ
இந்தியாவின் கர்நாடகாவில் பள்ளிக்கூடத்திற்கு ஹிஜாபுடன் வந்த ஆசிரியைகள், மாணவிகளை ரோட்டிலேயே அதை அகற்ற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஹிஜாப், பர்தா பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளது. அதன்படி நேற்று ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளோடு, ஆசிரியைகளும் அதை வாசலில் நின்று அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளி வளாகத்திற்குள் கூட அனுமதிக்காமல் ரோட்டிலேயே நின்று ஹிஜாப்பை அகற்றுமாறு மாணவிகளை ஆசிரியர்கள் வலியுறுத்தியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மாண்டியாவில் உள்ள ஒரு பள்ளியில், ஹிஜாபுடன் வந்த மாணவிகளை ஒரு ஆசிரியை ரோட்டிலேயே தடுத்து நிறுத்தினார். அதை அகற்று அகற்று என்று அவர் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.
#Mandya dist administration has instructed even the teachers to be not allowed inside campus with #hijab. They should remove the hijab at the gate itself before entering school or college. #KarnatakaHijabRow #HijabControversy #Karnataka pic.twitter.com/bt33RTTmgp
— Imran Khan (@KeypadGuerilla) February 14, 2022
இதனால் அவருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மூண்டது. பள்ளி வளாகத்திற்குள் போயாவது அகற்ற விடுங்கள், இப்படியா ரோட்டிலேயே அநியாயம் செய்வீர்கள் என்று பெற்றோர்கள் கோபத்துடன் கூறினர்.
இதனால் அந்தப் பள்ளிக்கூட வாசலில் பரபரப்பு நிலவியது. மாணவிகள் மட்டுமல்லாமல் ஹிஜாபுடன் வந்த ஆசிரியைகளையும் அந்த ஆசிரியை விடவில்லை. ஒரு ஆசிரியை தனது மகளுடன் பள்ளிக்கு வருகிறார். மகளுக்கு ஹிஜாப் அணிவிக்கவில்லை. இதனால் அவரை உள்ளே அனுமதித்து விட்டனர்.
ஆனால் ஆசிரியை தடுத்து நிறுத்தப்படுகிறார். அவர் வாசலிலேயே, அதாவது ரோட்டிலேயே நின்று தனது பர்தாவை எடுக்கிறார், ஹிஜாபை அகற்றுகிறார். அதன் பின்னர் பள்ளிக்குள் போகிறார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.