பிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த பெண் மீது தாக்குதல்: பட்டப்பகலில் சம்பவம்
மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரி தெருவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் மீது மர்ம நபர் கப்பால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைபாதை கல்லை
குறித்த தாக்குதலில் இருந்து அந்த பெண் நூலிழையில் தப்பியதாகவே கூறப்படுகிறது. பின்னர் அப்பகுதியில் இருந்து விலகி ஓடிய அந்தப் பெண், பொதுமக்கள் சிலர் நின்றிருந்த பகுதியில் மறைந்துள்ளார்.
This is absolutely horrific - a hijab wearing Muslim woman has had a paving slab thrown at her head by a white man in Dewsbury, West Yorkshire.
— Waqas Tufail (@_WaqasTufail) October 25, 2023
Violent Islamophobia is on the increase. pic.twitter.com/AqjNBRIqiI
தொடர்புடைய காணொளி சமூக ஊடக பக்கத்தில் வெளியாகி, பார்வையாளர்கள் பலரை கொதிப்படைய வைத்துள்ளது.
குறித்த காணொளியை பகிர்ந்து கொண்ட நபர் ஒருவர், இது முற்றிலும் பயங்கரமான சம்பவம். மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரியில் ஒருவன் ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமியப் பெண்ணின் தலையில் ஒரு நடைபாதை கல்லை வீசியுள்ளான் என குறிப்பிட்டுள்ளார்.
Credit: Ben Lack
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், நான் உணவு வாங்க உள்ளே சென்றேன், அவள் குடை வைத்திருந்ததால் மழையில் வெளியில் காத்திருக்க முடிவெடுத்தாள்.
காயமும் ஏற்படவில்லை
திடீரென்று மக்கள் ஓடுவதையும் இந்த நபரையும் பார்த்தேன். அவர் ஓட முயன்றார், ஆனால் நான் அவரைப் பின்தொடர்ந்து ஓடி அவரைப் பிடித்தேன்.
உடனே அவன் பொலிஸை அழைக்காதே, இனிமேல் செய்யமாட்டேன்' என்று கத்தினான். பொலிசார் வருவதற்காக அவரை பிடித்து வைத்திருந்தோம் என்றார்.
Credit: Ben Lack
மேலும் தமது மனைவிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், அதிர்ச்சியாகவும் அழுத்தமாகவும் இருக்கிறாள் என தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தை இணைய பயனர்கள் பலர் கொதிப்படைய வைத்துள்ளது என்றே குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |