சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற நபருக்கு நேர்ந்த துயர முடிவு
Hiker dies after 650 feet fall in Switzerland: சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
சனிக்கிழமையன்று, மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Fribourg Pre-Alps என்னும் மலையில் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார் 69 வயது நபர் ஒருவர்.
துயர முடிவு
இந்நிலையில், அவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து விட்டதாக அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஹெலிகொப்டர் உதவியுடன் அவர் மேலே கொண்டுவரப்பட்ட நிலையில், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை அறிவதற்காக Fribourg மாகாண பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |