விஜய் ஹசாரே கோப்பை: தமிழகத்தை வீழ்த்தி சாம்யினாக முடிசூடி வரலாறு படைத்தது இமாசலபிரதேசம்
இந்திய உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் தமிழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இமாசலபிரதேசம்.
டிசம்பர் 26 ஜெய்பூரில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழகம் மற்றும் இமாசலபிரதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற இமாசலபிரதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக தினேஷ் கார்த்தின் 116 ரன்கள் அடித்தார். இமாசலபிரதேச பந்து வீச்சாளர் பங்கஜ் ஜஸ்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
315 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இமாசலபிரதேச அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் நடுவர்கள் போட்டியை நிறுத்தினர்.
இதன் பின்னர் VJD முறைப்படி இமாசலபிரேதச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இமாசலபிரதேச ஓபனிங் பேட்ஸ்மேன் சுபம் அரோரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 136 அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதனையடுத்து, ரிஷி தவான் தலைமையிலான இமாசலபிரேச அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
THAT. WINNING. FEELING! ? ?
— BCCI Domestic (@BCCIdomestic) December 26, 2021
The @rishid100-led Himachal Pradesh beat Tamil Nadu to clinch their maiden #VijayHazareTrophy title. ? ?#HPvTN #Final
Scorecard ▶️ https://t.co/QdnEKxJB58 pic.twitter.com/MeUxTjxaI1
உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் இமாசலபிரேச அணி வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
#VijayHazareTrophy winners. ?
— BCCI Domestic (@BCCIdomestic) December 26, 2021
Congratulations and a round of applause for Himachal Pradesh on their triumph. ? ?#HPvTN #Final pic.twitter.com/bkixGf6CUc