ஹிண்டன்பர்க் அறிக்கை... ஒரு சில மணி நேரத்தில் ரூ 53,000 கோடியை இழந்த அதானி நிறுவனங்கள்
ஹிண்டன்பர்க் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்று சரிவைச் சந்தித்துள்ளன.
அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக
கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்.
உலக நாடுகளில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்க நிறுவனம் இந்த ஹிண்டன்பர்க். இந்த நிறுவனமனாது கடந்த வாரம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் விளைவாக அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
86 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ 53,000 கோடி அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்ததாகவே தகவல் வெளியானது. இதனால் பெரும் கோடீஸ்வரர் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்துள்ளார் அதானி.
ஏற்கனவே அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது இந்திய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டது.
அதில், அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் (Madhabi Puri buch) தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான மதிப்பில் பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தது.
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில்
தொடர்புடைய அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்றது.
அத்துடன், ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் தொடங்கியுள்ளது. அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி எனர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டுள்ளது.
சுமார் 7 சதவீதம் வரை அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |