CSK ரசிகர்களை கடுப்பேற்றிய ரெய்னா! பற்றி எரியும் சமூகவலைத்தளம்: அப்படி என்ன செய்தார் தெரியுமா?
‘இந்தி நமது மொழி’ இந்திய முன்னாள் வீரரும், சின்ன தல என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தி மொழி நாளாள மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இன்று இந்தி மொழி நாளை முன்னிட்டு சிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டர் பதிவிட்ட கருத்து ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்னா பதிவிட்தாவது, நமது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு நமது நாட்டின் அடையாளம், நாம் இந்துஸ்தானி, இந்தி நமது மொழி.
அனைவருக்கும் இந்தி திவாஸ் வாழ்த்துக்கள் என ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
हमारी एकता और अखंडता ही हमारे देश की पहचान है, हिंदुस्तानी हैं हम और हिंदी हमारी जुबान है।
— Suresh Raina?? (@ImRaina) September 14, 2021
हिन्दी दिवस पर आप सभी को शुभकामनाएं।??????#hindidiwas2021
ரெய்னாவின் பதிவுக்கு பதிலளத்த பலர், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி இருக்கிறது, இந்தி எப்படி எங்களுடைய மொழியாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மறுபுறம் சில வட இந்தியர்கள், ரெய்னா சொன்னது சரி தான், இந்தி நமது மொழி தான் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ரெய்னாவின் ட்விட் சமூக வலைதளத்தில் இந்தி தொடர்பான விவாதத்தை தூண்டியுள்ளது.
2020 ஆகஸ்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்ற ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் நடச்சத்திர வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.