இந்தி மொழி விவகாரம்.., பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்
இந்தி மொழி குறித்து ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பதில் அளித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் பதிலடி
இந்தி மொழி குறித்து ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசுகையில், "இந்தியாவுக்கு தமிழ் உள்பட பல மொழிகள் தேவையாக உள்ளது.
இரு மொழிகள் மட்டுமே போதாது. நமது நாட்டின் மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் பேணுவதற்கு பன்முக தன்மை அடிப்படையில் பல மொழிகளை ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசியல்வாதிகள் பணத்துக்காக தங்களுடைய திரைப்படங்களை இந்தியில் டப் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? என்று தான் புரியவில்லை.
பாலிவுட்டில் இருந்து பணம் மட்டும் வேண்டும் என்கிறார்கள். ஆனால், இந்தியை மட்டும் புறக்கணிக்கிறார்கள். இது எந்த மாதிரியான லாஜிக் என்று புரியவில்லை" என்றார்.
இவரின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "இந்தி மொழியை திணிக்காதீர்கள் என்று கூறுவது அந்த மொழியின் மீதான வெறுப்பல்ல.
எங்கள் தாய்மொழியையும், நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்போம் என்பதாகும். இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |