வடகொரிய இளைஞரை வேலையில் அமர்த்திய பிரித்தானிய நிறுவனம்... நடந்த மறக்க முடியாத சம்பவம்
பிரித்தானியா உள்ளிட்ட முதன்மையான நாடுகளில் செயல்படும் நிறுவனம் ஒன்று தவறுதலாக வடகொரிய ஹேக்கர் ஒருவரை வேலையில் அமர்த்தியதால் எதிர்கொண்ட சிக்கல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தரவுகளை திருடிவிட்டு
வேலையில் மோசமான செயல்பாட்டிற்காக அந்த நிறுவனம் அவரை நீக்கியதை அடுத்து, அந்த நிறுவனத்தின் அதி முக்கியமான தரவுகளை திருடிவிட்டு, 6 இலக்க தொகை மதிப்பிற்கு கிரிப்டோகரன்சி கோரியுள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வருகிறது தொடர்புடைய நிறுவனம். இந்த நிலையில், தவறுதலாக வடகொரிய ஹேக்கர் ஒருவரை தொலைவில் இருந்து பணியாற்றும் வகையில் அந்த நிறுவனம் பணிக்கு அமர்த்தியது.
ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்த அந்த நபர் 4 மாதங்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், நிறுவனத்தின் அதி முக்கியமான தரவுகளை அந்த நபர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
3 பில்லியன் டொலர்
ஆனால் வேலையில் திருப்தி இல்லை என்பதால், அந்த நிறுவனம் அவரை நீக்கியுள்ளது. இந்த நிலையிலேயே நிறுவனத்தில் இருந்து திருடிய தரவுகளை அவர்களுக்கே அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
6 இலக்க தொகை மதிப்பிற்கு கிரிப்டோகரன்சி வேண்டும் என கோரியுள்ளார். அந்த நிறுவனம் பணம் செலுத்தியதா இல்லையா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
ஆனால், இப்படியான சிக்கல்களில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். சமீபத்தில் தான் சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வடகொரிய ஹேக்கர்கள் திருடியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |