உலகம் அழியப்போவதாக எண்ணிய கனேடியர்: சிறைத்தண்டனை பெற்றுத் தந்த அவரது செயல்
கனேடியர் ஒருவர் உலகம் கொரோனாவால் அழியப்போவதாக எண்ணி, வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் வாங்கிக் குவிக்க, தற்போது அவர் சிறைக்குச் செல்கிறார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற இடத்தைச் சேர்ந்தவர் Brett Haynes (45).
நகரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கூட்டம் ஒன்றிற்கு சொந்தமானது என கருதப்பட்ட சேமிப்புக் கிடங்கு ஒன்றை பொலிசார் சோதனையிட முயன்றுள்ளார்கள். அப்போது அங்கு Brett வந்திருக்கிறார்.
அந்தக் கிடங்குக்குள் பலவகை துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள், வெடி பொருட்கள் முதலானவை இருந்துள்ளன.
ஆயுதங்கள் வைத்திருக்க Brettக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கிடங்கு ஒன்றில் இவ்வளவு ஆயுதங்களை சேமித்து வைத்திருந்ததால் பொலிசார் அவரைக் கைது செய்தார்கள்.
Brettஇன் சட்டத்தரணியோ, தனது கட்சிக்காரருக்கு கொஞ்சம் மன நலப் பிரச்சினை உள்ளது என்றும், ஆயுதங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், உலகம் அழியும்போது காட்டுக்குச் சென்று அங்கிருக்கும் ஒரு பாழடைந்த வீடு ஒன்றில் தங்கிக்கொள்ளும் நோக்கில் ஆயுதங்களை சேகரித்துவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Brettக்கு, இல்லாததை இருப்பது போல் எண்ணிக்கொள்ளும் மன நல பிரச்சினை உள்ளது என்று கூறியுள்ள அவர், Brett கொரோனா காரணமாக உலகம் அழியப்போகிறது என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் போதைப்பொருள் வேறு உட்கொள்வதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கற்பனை செய்துகொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள Brettக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 30 மாதங்கள் சிறையிலிருந்துவிட்டதையடுத்து, தற்போது அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் செலவிட உத்தரவிடப்பட்டுள்ளது.