இளவரசி டயானாவின் சவப்பெட்டிக்குப் பின்னால் நடக்கவைக்கப்பட்ட அவரது பிள்ளைகள்: மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ள கருத்து
இளவரசி டயானாவின் சவப்பெட்டிக்குப் பின்னால் அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியை நடக்கவைத்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் மன்னர் சார்லஸ்.
தனது 36ஆவது வயதில், விபத்தொன்றில் பலியான இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு, 1997ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற்றது.
இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் துயரமே உருவாக, தங்கள் தாயின் சவப்பெட்டியின் பின்னால், மனதில் ஆயிரம் கேள்விகளுடன் நடந்துசென்ற காட்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமுடியாது.
அவ்வளவு சிறுவயதில் தங்கள் தாயை இழந்ததன் பாதிப்பை, குறித்து அவ்வப்போது இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் வெளிப்படுத்துவதுண்டு.
Source:
Harper's Bazaar
இந்நிலையில், தன் பிள்ளைகளை டயானாவின் சவப்பெட்டிக்குப் பின்னால் நடக்கவைத்ததை எண்ணி மன்னர் சார்லஸ் வருந்துவதாக ராஜ குடும்ப எழுத்தாளரான Christopher Anderson என்பவர் தெரிவித்துள்ளார்.
அது தன்னை வருத்தப்படுத்துவதுபோலவே, தன் பிள்ளைகளையும் இப்போதும் வருத்தப்படுத்துவதாக தான் கருதுவதாக மன்னர் சார்லஸ் கூறியதாக தெரிவித்துள்ளார் Anderson.
Source:
EVOKE
அரண்மனையை நிர்வகிக்கும் அதிகாரிகள் ஹரியையும் வில்லியமையும் தங்கள் தாயின் சவப்பெட்டிக்குப் பின்னால் நடக்க வற்புறுத்தியதாக இளவரசர் ஹரி கூட சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
இளவரசி டயானாவும் இந்த அதிகாரிகள் குறித்து குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source:
Hamilton Spectator