கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ரிஷி சுனக்

Rishi Sunak Keir Starmer
By Arbin Jul 05, 2024 06:13 AM GMT
Report

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ள நிலையில், கடும் பின்னடைவுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி

மொத்தமுள்ள 650 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது லேபர் கட்சி. லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வருவார்.

கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ரிஷி சுனக் | Historic Defeat Sunak Accepts Responsibility

இதுவரை வெளியான தரவுகளில் லேபர் கட்சி 403 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 109 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளது.

இந்த நிலையில், இந்த வரலாற்று சரிவுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானிய மக்கள் இன்று ஒரு நிதானமான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய லண்டனில் பேசிய கெய்ர் ஸ்டார்மர், மாற்றம் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை எதிர்கொள்கின்றனர்.

முதல் முறை வெற்றி

170 ஆசனங்களுக்கும் மேலாக தோல்வியை சந்தித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி, அதிகபட்சம் 136 ஆசனங்களை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

நீண்ட 14 ஆண்டு கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள லேபர் கட்சி புது நம்பிக்கை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே Reform கட்சியின் தலைவர் Nigel Farage முதல் முறை வெற்றியை ருசித்துள்ளார்.

கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ரிஷி சுனக் | Historic Defeat Sunak Accepts Responsibility

கடந்த 8 முறை தோல்வியை சந்தித்துள்ள அவர், 2024 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவிவாகியுள்ளார். இதுவரை Reform கட்சி 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பல்வேறு தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கும் வந்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர், பிரித்தானியாவில் லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US