பிரான்சில் பழங்கால தேவாலயம் தீயில் எரிந்து நாசம்., இடிந்து விழுந்த மணிக்கூண்டு
பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் தீயில் எரிந்து நாசமானது.
வடக்கு பிரான்சில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 4:30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தீயின் விளைவாக அதன் மணிக்கூண்டு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Saint-Omer பகுதியில் அமைந்துள்ள இமான்குலேட் கான்செப்ஷன் (Immaculate Conception Church) தேவாலயத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின் காரணம் முதற்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் பெரும் தீப்பிழம்புகள் மற்றும் புகை வானத்தில் உயர்ந்து செல்லும் காட்சிகள் காணப்பட்டன.
BFM TV செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த தீயில் யாரும் காயம் அடையவில்லை, மேலும் 90 தீயணைப்பு வீரர்கள் இமான்குலேட் கான்செப்ஷன் தேவாலயத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
Another Church was mysteriously burned down in France. The church of the Immaculate Conception of Saint-Omer.
— Klaus Arminius (@Klaus_Arminius) September 2, 2024
The Church was built in 1854 and survived two World Wars.
A Church is destroyed, damaged or vandalized every two weeks in France.
pic.twitter.com/Paq6mNCGNQ
காலை 7:15 மணியளவில் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், அதிக சேதம் ஏற்பட்டது.
பிரஞ்சு ஊடகங்கள் தெரிவித்தபடி, இமான்குலேட் கான்செப்ஷன் தேவாலயத்தின் கூரை, மணிக்கூண்டு மற்றும் கோபுரம் இடிந்து விழுந்துவிட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Framce Historic Church Fire, France's Immaculate Conception Church in Saint-Omer catches fire, Historic French Church Fire, Immaculate Conception Church