இலங்கையில் முதல் முறையாக இரட்டைசதம்! புதிய வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர் சாத் ஷகீல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் மிரட்டிய இலங்கை வீரர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 312 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணி 461 ஓட்டங்களும் குவித்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை 279 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 82 ஓட்டங்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் அபரர் அகமது, நோமன் அலி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து 131 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 48 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
வரலாற்று சாதனை படைத்த ஷகீல்
இதற்கிடையில் பாகிஸ்தானின் முதல் இன்னிங்சில் சாத் ஷகீல் இரட்டை சதம் அடித்தார். இதன்மூலம் இலங்கை மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன்பு முகமது ஹபீஸ் 2012ஆம் ஆண்டில் 196 ஓட்டங்கள் எடுத்ததே இலங்கையில் பாகிஸ்தான் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
2️⃣0️⃣8️⃣ not out
— Pakistan Cricket (@TheRealPCB) July 18, 2023
3️⃣6️⃣1️⃣ balls
1️⃣9️⃣ fours
???? like @saudshak! Phenomenal innings by the southpaw ?#SLvPAK pic.twitter.com/g2Kz7QYtdg
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |