மனிதர்களின் மதியை மயக்கும் மதிகெட்டான் சோலை.. இங்கு சென்றவர்கள் யாரும் உயிரோட திரும்பி வந்ததில்லை!
இந்தியாவின் கொடைக்கானல் பகுதியில் சுற்றி பார்க்க்க ஏராளமான இடங்கள் இயற்கையோடு எழில் மிகுந்து காணப்படுகின்றது. அந்த வகையில் குணா குகைக்கு அருகில் பெரிஜாம் என்ற ஏரி 100 வருடங்களாக இருந்து வருகிறது.
அந்த ஏரியில் உள்ள ‘மதிகெட்டான் சோலை’ என்ற இடத்துக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடவில்லை.
இச்சோலைக்கு மீறி சென்றால் மரணம் நிச்சயம் அல்லது நாம் யாரென்று மறந்து மதி கலங்கிய நிலைக்கு தள்ளப்படும் சுழல் உண்டாகும் என்று அங்கு வசிக்கும் மக்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மதிகெட்டான் சோலையின் தோற்றமானது எவ்வகை சூரிய ஒளியும் உள்ளே செல்ல விடாமல் தடுப்பது போல் மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். இச்சோலையை மக்கள் ‘கிறுக்கு காடு’ என்றும் அழைக்கின்றனர்.
மதிகெட்டான் சோலை தனிமை, மற்றும் சிக்னல்யின்மை போன்ற காரணங்களால் சூழப்பட்டு அன்றாட தேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மனிதர்களுக்கு பைத்தியம் பிடிப்பது போல் தோன்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சோலையில் உதிரும் பூக்களின் நறுமணம் மிகவும் வலிமை வாய்ந்து விளங்குவதால் அம்மணம் எங்கும் நீங்காமல் சோலையிலே சுற்றிக்கொண்டிருக்கும். இதனால் மனிதனின் மதி மயங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இச்சோலைக்கு சென்றவர்கள் மரணமடைந்தோ அல்லது மதி கலங்கியோ வெளியே வருவது தான் இச்சோலையின் பெருமை ஆகும்.
இதனால் இச்சோலைக்கு செல்ல மக்கள் அஞ்சும் நிலையில் இதுவரை இச்சோலைக்கு சென்ற 20 நபர்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.