கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ரிஷப் பண்ட்!
பெங்களூருவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இலங்கை 109 ரன்களுக்கு சுருண்டது.
இந்நிலையில் 2வது நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.
46 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.
மயங்க் அகர்வால் (22), ரோகித் சர்மா (46), விஹாரி (35), கோலி (13), ரிஷ்ப் பண்ட் (50) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற கபில்தேவின் 40 ஆண்டுகால் சாதனையை பண்ட் முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
1982 டிசம்பரில் கராச்சி டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது கபில்தேவ் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இருந்தபோதிலும், பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.