பிரித்தானியாவில் நடைபாதை பயணிகள் மீது பாய்ந்த கார்: தப்பி ஓடிய சாரதிக்கு வலைவீச்சு
பிரித்தானியாவின் ஆர்னால்டு நகரில் சாலை விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய ஓட்டுநரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடைபாதை பயணிகள் மீது பாய்ந்த கார்
சனிக்கிழமை காலை நாட்டிங்ஹாம்ஷையரின் ஆர்னால்டு நகர மையப்பகுதியில் மோசமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவப்பு நிற வாக்ஸ்ஹால் அஸ்ட்ரா ரக கார் ஒன்று மார்க்கெட் பிளேஸ் பகுதியில் வேகமாக சென்று நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தப்பியோடிய ஓட்டுநர்
விபத்து ஏற்பட்டவுடன் ஓட்டுநர் காரை அந்த இடத்திலேயே விட்டு தப்பியோடியுள்ளார் என நாட்டிங்ஹாம்ஷையர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தப்பி ஓடிய நபர் வெள்ளை இனத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது, அவரை பிடிக்க பொலிஸார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாத பின்னணி எதுவும் இல்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |