வரலாற்றில் மறைக்கப்பட்ட சர்வாதிகாரி ஹிட்லரின் மறுபக்கம்! (வீடியோ)
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.
இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
முதல் உலகப் போர் தொடங்கியபோது, ஹிட்லர் ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்தார்.
முதலாம் உலகப் போரின்போதுதான் ஹிட்லர் ஒரு வலுவான ஜெர்மன் நாட்டுப்பற்றாளராக மாறினார், மேலும் போரை விரும்பி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
போருக்குப் பிறகு, ஹிட்லர் அரசியலில் நுழைந்தார். பல ஜெர்மானியர்கள் போரில் தோற்றுவிட்டோம் என்று வருத்தப்பட்டனர்.
ஜெர்மானியும் ஒரு சில காலத்தில் வறுமைக்கோட்டிற்கு வந்தது. அதை தொடர்ந்து ஹிட்லர் அதிகாரத்திற்கும் வந்தார்.
மேலும் இவர் பிறந்தது முதல் அவர் இறக்கும் வரை அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து வெளியாகவுள்ள புதையல் நிகழ்ச்சியினூடக தெரிந்துக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |