கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படியொரு ரன் அவுட்டை பார்த்திருக்கவே மாட்டீங்க! வைரல் வீடியோ
கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக வித்தியாசமான முறையில் ரன் அவுட் நடந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கதேசத்தில் நடக்கும் வங்கதேச ப்ரீமியர் லீக் போட்டியிலேயே இந்த ரன் அவுட் நடந்துள்ளது.
நேற்று நடந்த ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி, மினிஸ்டர் குரூப் டாக்கா அணியை எதிர்கொண்டது.
இதில் டாக்கா மினிஸ்டர்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸல் இடம்பெற்றுள்ளார்.
டாக்கா அணி, 125 ஓட்டங்களை எடுத்திருந்த போது, திசாரா பெரேரா பந்து வீச, அதனை ஆண்ட்ரே ரஸல் எதிர்கொண்டு, தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு சிங்கிள் எடுக்க முயன்றார்.
அப்போது எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் மகமதுல்லா, ஸ்ட்ரைக்கர் எண்டை அடைந்தபோது, ஃபீல்டர் மெகதி ஹசன் எறிந்த பந்து, ஸ்டம்பை தட்டியது.
பின்னர் அந்த பந்து, எதிர் முனையில் இருந்த ஸ்டம்பையும் தட்டியது. இதனைப் பார்த்து, முக்கால் தூரத்தை ரிலாக்ஸாக கடந்து கொண்டிருந்த ரஸல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடுவர் முடிவின்படி ரஸல் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
One of the strangest run out you'll see on a cricket field.pic.twitter.com/0VnYVTvQnQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 21, 2022