எய்ட்ஸ் நோயாளிகளே! நீண்ட நாள் உயிர் வாழ வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை தவறாமல் எடுத்துகோங்க
World Aids Day
HIV Symptoms
By Kishanthini
பொதுவாக எச்.ஐ.வி வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது.
ஆனால் எய்ட்ஸ் நோயாளிகள் எச்.ஐ.வி மருந்துகளுடன், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்களுக்கு கிருமிகளை எதிர்த்துப் போராடத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
இதன் மூலம் எச்.ஐ.வி தொற்றால் ஆரோக்கியம் மோசமாவதை ஓரளவு தடுக்கலாம் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் எய்ட்ஸ் நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்பதை இப்போது காண்போம்.
- தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் தங்கள் உணவுகளில் சேர்க்க வேண்டும். இதனால் மூலம் உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.
- புரோட்டீனை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இந்த புரோட்டீன் தோல்நீக்கப்பட்ட மாட்டிறைச்சி, தோல் நீக்கப்பட்ட சிக்கன், மீன், முட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் உள்ளன.
- கைக்குத்தல் அரிசி, முழு தானிய பிரட் போன்ற முழு தானிய உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
- எய்ட்ஸ் நோயாளிகள் தினமும் உண்ணும் உணவுகளில் குறைவான உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முடிந்தவரை தவிர்ப்பது இன்னமும் நல்லது.
- கொழுப்புக்கள் நிறைந்த நட்ஸ், மீன்கள், அவகேடோ, வெஜிடேபிள் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
- ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் நீரைக் குடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்
குறிப்பு
இறைச்சி உணவுகளை நன்கு சமைத்த பின்னரே உண்ண வேண்டும்.
உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும். ஆறிய உணவுகளை நன்கு சூடேற்றிய பின்னரே சாப்பிட வேண்டும்.
பச்சை முட்டைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US