3,999 ரூபாய்க்கு இந்தியாவில் HMD Touch 4G ஹைபிரிட் போன் அறிமுகம்
ரூ.3,999-க்கு இந்தியாவில் HMD Touch 4G ஹைபிரிட் போன் அறிமுகமாகிறது.
பின்லாந்து நிறுவனமான Human Mobile Devices (HMD), இன்று (அக்டோபர் 7) இந்தியாவில் புதிய ஹைபிரிட் 4G போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
“Touch 4G” என அழைக்கப்படும் இந்த மொபைல், smartphone மற்றும் feature phone அம்சங்களை ஒருங்கிணைத்ததாகும்.
இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, குறைந்த விலையில் இந்த மொபைல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போனில் 3.2-inch touch display, 2 MP rear camera மற்றும் VGA front camera உள்ளது.
Wi-Fi மற்றும் Wi-Fi hotspot வசதிகள், Bluetooth இணைப்பு, MP3 player, Type-C சார்ஜிங், auto call recording மற்றும் jelly cover உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. 2,000 mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் சார்ஜர் கொடுக்கப்படுகிறது.
முக்கிய அம்சமாக, “ICE” (In Case of Emergency) எனப்படும் விசைப்படி மூன்று முறை அழுத்துவதன் மூலம் அவசர அழைப்புகள் மற்றும் “Express Chat” செயலியில் உடனடி தொடர்பு ஏற்படுத்தலாம். இந்த செயலி Android மற்றும் iOS சாதனங்களில் 13 மொழிகளில் செயல்படுகிறது.
இந்த Touch 4G போன் ரூ.3,999 விலையில் அக்டோபர் 9 முதல் இந்தியாவின் முன்னணி விற்பனை நிலையங்கள் மற்றும் ஓன்லைன் தளங்களில் கிடைக்கும். Cyan மற்றும் Dark Blue நிறங்களில் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
HMD Touch 4G India launch, HMD hybrid phone, Touch 4G specs and price, Feature smartphone under 4000, Budget 4G phone India