இரட்டை கொலை குற்றவாளி சிறையில் மரணம்: சக சிறைக்கைதி மீது பொலிஸார் வழக்குப்பதிவு
பிரித்தானியவில் இரட்டை கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி இயன் ஹன்டலி கொல்லப்பட்ட சம்பவத்தில் சக கைதி ஒருவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட இயன் ஹன்டலி
பிரித்தானியாவின் சோஹம்(Soham) கடந்த 2022ம் ஆண்டு 10 வயது சிறுமிகளான ஹாலி வெல்ஸ் மற்றும் ஜெசிகா சாப்மேன் ஆகிய இருவரை இயன் ஹன்டலி(Ian Huntley) என்ற நபர் கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் டர்ஹாம்(Durham) நகரில் அமைந்துள்ள HMP பிராங்க்லாண்ட் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இயன் ஹன்டலி, கடந்த பிப்ரவரி 26ம் திகதி காலை சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்தார்.
சம்பவம் கிடைத்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் அவசர கால மீட்பு குழுவினர் பலத்த காயமடைந்த 52 வயது இயன் ஹன்டலி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர், இருப்பினும் அவர் மார்ச் 7ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

சக சிறைக்கைதி மீது வழக்கு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 43 வயது தண்டனை கைதி அந்தோணி ரசல் மீது பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர் மார்ச் 11ம் திகதி நியூட்டன் அய்க்ளிஃப் நீதிமன்றத்தில் வீடியோ அழைப்பு வாயிலாக ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |