சுவிஸ் தடுப்பூசி திட்டம் குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் விமர்சனம்
சுவிஸ் தடுப்பூசி திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதானம், சுவிட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளின் கொரோனா தடுப்பூசி திட்டம் ஒரு ஒழுக்க நெறி ஊழல் என விமர்சித்துள்ளார்.
உலகின் மொத்த தடுப்பு மருந்தில் மூன்றில் ஒரு பங்கையும், 10 நாடுகள் மட்டுமே செலவிட்டுள்ளது ஒரு ஒழுக்க நெறி ஊழல் என்று கூறியுள்ளார் அவர். உலகின் ஏழை நாடுகளில் அபாய நிலையில் உள்ள மக்களுக்கு இன்னமும் தடுப்பூசி கிடைக்காத நிலையில், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் 12 முதல் 16 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குகின்றன என்று கூறியுள்ளார் அவர். தற்போதைய நிலவரப்படி, ஏழை நாடுகளில்தான் குறைவான அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஆப்பிரிக்க மக்கள்தொகையில் 3 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை உலகில் செலவிடப்பட்டுள்ள தடுப்பூசியைக் கணக்கிட்டால், உலகம் முழுவதும் உள்ள முதியவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கியிருக்கமுடியும் என்று கூறியுள்ள டெட்ராஸ் அதானம், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகள் தடுப்பூசி போட மறுப்பவர்களின் எண்ணிக்கையைக் கூட கருத்தில் கொள்ளாமல் தங்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கான தடுப்பூசியையும் வாங்குவதாக விமர்சித்துள்ளார்.