44 பந்துகளில் 98 ஓட்டங்கள் விளாசிய வீராங்கனை: பரபரப்பான ஆட்டத்தில்..கடைசி பந்தில் வெற்றி
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மகளிர் அணி கடைசி பந்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை வீழ்த்தியது.
WBBL டி20 போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் நிர்ணயித்த 217 ஓட்டங்கள் இலக்கினை, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் கடைசி பந்தில் எட்டி அபார வெற்றி பெற்றது.
வோல்வார்ட் 93 ஓட்டங்கள்
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான WBBL போட்டி கரேன் ரோல்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய அடிலெய்டு அணி 19.3 ஓவர்களில் 216 ஓட்டங்கள் குவித்தது.
You'll struggle to find a cricketer in better form than Laura Wolvaardt! Here's the best of her 93* (49) balls against the Hurricanes in Adelaide. #WBBL12 https://t.co/mBrXQ0Lhq5
— Weber Women's Big Bash League (@WBBL) November 29, 2026
லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 93 ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் டாலியா மெக்ராத் 22 பந்துகளில் 51 ஓட்டங்களும், மேடலின் பென்னா 16 பந்துகளில் 28 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ஹோபார்ட் அணியில் லிஸேல் லீ ருத்ரதாண்டவம் ஆடினார். அவரது அதிரடியில் ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது.
லிஸேல் லீ ருத்ரதாண்டவம்
98 (44) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் லிஸேல் லீ (Lizelle Lee) லரோசா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
That is BIG 💥 "Lizelle Lee is threatening to change the course of the finals." #WBBL12 https://t.co/7cwiw34T20
— Weber Women's Big Bash League (@WBBL) November 29, 2026
அடுத்து ரேச்சல் ட்ரேனமன் 19 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அவுட் ஆக, விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட, மோலி ஸ்ட்ரானோ பவுண்டரி மற்றும் ஒரு ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
HURRICANES WIN! The Strikers are out, and the Heat are in the #WBBL12 Finals. https://t.co/U1LtvmeoFF
— Weber Women's Big Bash League (@WBBL) November 29, 2026