சிட்னி சிக்ஸர்ஸை வீழ்த்தி கெத்தாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ்
பிக்பாஷ் லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியது.
மெக்டெர்மோட் 42
Bellerive Oval மைதானத்தில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் (Sydney Sixers) அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 173 ஓட்டங்கள் குவித்தது. பென் மெக்டெர்மோட் 42 (31) ஓட்டங்களும், ஜுவெல் 40 (41) ஓட்டங்களும் எடுத்தனர்.
"Look out if you're in the crowd tonight!"
— KFC Big Bash League (@BBL) January 21, 2025
Mitch Owen is ON. #BBL14 pic.twitter.com/iye5SfHd8V
பின்னர் ஆடிய சிட்னி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்களே எடுத்தது. இதனால் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் அணி வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஹோபர்ட்
அதிகபட்சமாக சில்க் 57 (44) ஓட்டங்களும், பேட்டர்சன் 48 (33) ஓட்டங்களும் விளாசினர். மெரிடித், கன்னோன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் ஹோபர்ட் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
சிட்னி அணி நாளை நடைபெற உள்ள நாக்அவுட் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்சை எதிர்கொள்ள உள்ளது.
Listen to the crowd!
— KFC Big Bash League (@BBL) January 21, 2025
The HURRICANES are heading to the #BBL14 Final 💜@BKTtires #GoldenMoment pic.twitter.com/Y9qJitvvJK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |