முழங்கால் வரை முடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
சுத்தமான தேங்காய் எண்ணெய் எப்படி தயாரிப்பது?
முதலில் 4 தேங்காய்களை எடுத்து அதனை தண்ணீருக்குள் போட்டு எடுக்கவும். அப்பொழுதுதான் உடைக்கும் சமயத்தில் நார் நாராக வராது.
பின் தேங்காயை உடைத்து தேங்காய் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து தேங்காயை நன்கு துருவி அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அதற்கு பதிலாக தேங்காய் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை ஒரு துணியில் சேர்த்து தேங்காய் பாலை மற்றும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து, ஒரு பெரிய வாணலில் தேங்காய் பால் சேர்த்து அதனை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.
தேங்காய் பால் நன்கு சுண்டக் காய்ச்சிய பிறகு எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். அதுவரை அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருங்கள்.
நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் இதனை அரை மணி நேரத்திற்கு ஆற விடுங்கள்.
பின் இதனை நன்கு வடிகட்டி ஒரு பாட்டிலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி வைத்து பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |