மீண்டும் பழைய பார்மில் மிரட்டும் டேவிட் வார்னர்! அடுத்தாண்டு ஐபிஎல்-லில் இந்த அணிக்கு தான் விளையாடுவார்... பிரபல வீரர் கணிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருதை வென்ற் டேவிட் வார்னர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள அணி குறித்து ஜாம்பவான் பிராட் ஹாக் கணித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தொடரின் பாதியில் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அணியில் இருந்தும் நீக்கப்பட்ட அவர் கடைசி சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமர்ந்து அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னர் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரை விடுவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
மீண்டும் உச்ச பார்முக்கு வந்துள்ள வார்னர் அடுத்தாண்டு ஐபிஎல் அணிக்காக அடுத்த ஆண்டு விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் டேவிட் வார்னர் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நிச்சயம் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
ஏனெனில் பெங்களூரு மைதானம் வார்னருக்கு ஏற்றார் போல் இருக்கும் அதுமட்டுமின்றி அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரோடு விராத் கோலி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி உள்ளதால் அந்த அணிக்கு ஒரு கேப்டன் அவசியம்.
அந்த வகையில் ஏற்கனவே கேப்டன்சி அனுபவமுள்ள டேவிட் வார்னர் ஆர் சி பி அணிக்கு கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆர்சிபி அணியில்தான் நிச்சயம் வார்னர் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.