இளவரசி டயானாவின் மரணத்தின்போது சம்பவ இடத்திலிருந்த மற்றொரு கார்... காரை செலுத்திய நபர் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

UK
By Balamanuvelan Jun 25, 2021 08:24 AM GMT
Report

இளவரசி டயானாவின் கார் பாரீஸில் விபத்துக்குள்ளானபோது சம்பவ இடத்தில் மற்றொரு காரும் இருந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி டயானா, தனது புதிய காதலரான டோடி ஃபயத்துடன் பாரீஸில் ஒரு சுரங்கப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு விபத்தில் கொல்லப்பட்டார். அது விபத்தல்ல, திட்டமிட்ட சதி என இன்னமும் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்த கூற்றை நிரூபிக்க வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. விபத்தில் டயானாவுடன் அவரது காதலர் டோடியும், சாரதியும் உயிரிழக்க, டோடியின் பாதுகாவலர் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஆனால், விபத்தில் படுகாயமடைந்த அவர் தனது நினைவை இழந்துவிட்டதால், அவரால் என்ன நடந்தது என்று தெளிவாக கூற இயலவில்லை.

இதற்கிடையில், விபத்து நடந்தபோது, அதே சுரங்கப்பாதையில் மற்றொரு வெள்ளை நிற பியட் கார் பயணித்துள்ளது. அது டயானாவின் காருடன் லேசாக மோதிவிட்டு அங்கிருந்து விரைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் மரணத்தின்போது சம்பவ இடத்திலிருந்த மற்றொரு கார்... காரை செலுத்திய நபர் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் | Hold Key Mystery Princess Dianas Death Denies

அந்த காரை ஓட்டியவர், வியட்நாமிலிருந்து புலம்பெயர்ந்தவரான Le Van Thanh (22) என்னும் பாரீஸில் வேலை செய்த பாதுகாவலர் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், Thanhஐ விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். விபத்து நடந்த அதே பாதையில் பயணித்த Georges மற்றும் Sabine Dauzonne என்னும் தம்பதி, தாங்களும் அந்த வெள்ளை நிற பியட் காரை பார்த்ததாகவும், அந்த காரில் ஒரு நாய் இருந்ததாகவும் கூறினார்கள்.

அவர்கள் தாங்கள் பார்த்த நபரின் உருவத்தையும் விவரித்திருந்தார்கள். டயானாவின் காரை தடயவியல் நிபுணர்கள் சோதனைக்குட்படுத்தியபோது, அதில் ஒரு வெள்ளை நிற கார் மோதியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இளவரசி டயானாவின் மரணத்தின்போது சம்பவ இடத்திலிருந்த மற்றொரு கார்... காரை செலுத்திய நபர் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் | Hold Key Mystery Princess Dianas Death Denies

ஆனால், பொலிசார் Thanhஐ தேடிச் செல்லும்போது அவரது கார் சிவப்பு நிறத்திலிருந்தது. விசாரித்ததில், தான் முன்பே தனது வெள்ளை நிற காரை சிவப்பாக மாற்றிவிட்டதாக கூறினார் அவர். ஆனால், Georges மற்றும் Sabine Dauzonne தம்பதி, விவரித்த அடையாளம் Thanhக்கு சரியாக பொருந்தியது.

அவர்கள் கூறிய காரின் எண்கள் சிலவும் பொருந்தின. அத்துடன் Thanhஇடம் ஒரு பெரிய நாயும் இருந்தது. ஆனால், மீண்டும் மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறிவிட்டார் Thanh. பின்னர், இன்னொரு திருப்பம் நிகழ்ந்தது. Thanhஇன் தந்தை, டயானாவின் விபத்துக்குப் பிறகுதான் தன் மகன் தனது காரை சிவப்பு பெயிண்ட் அடித்து மாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

ஆனால், அதற்கு மேல் Thanhஐ விசாரிக்க பிரான்ஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உண்மையில் நடந்தது என்ன, Thanh ஏன் உண்மையை மறைக்கிறார், அவருக்கும் டயானா மரணத்துக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என ஏராளம் கேள்விகள்.

பத்திரிகையாளர்கள் அவரைத் தேடிக்கண்டுபிடித்து டயானா மரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால், Thanh எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவர் வாய் திறந்தால், பல உண்மைகள் வெளியாகலாம். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US