ஜூலை 7ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை- வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இவ்விழாவிற்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தமிழக அரசு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |