உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த சம்பவம்... 3,000 விமானங்கள் ரத்து: இதுவரையான மொத்த தகவல்
திடீரென்று ஏற்பட்ட மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனால் கோடைகால விடுமுறை பயணங்கள் அனைத்தும் பாழானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்தபித்துள்ள உலக நாடுகள்
வரலாற்றிலேயே மிகப்பெரிய மென்பொருள் முடக்கம் இதுவென குறிப்பிடும் இந்த நெருக்கடியால், உலகின் முதன்மையான விமான நிலையங்கள். விமான சேவைகள், ரயில் போக்குவரத்து, பல்பொருள் அங்காடிகள் என உலக நாடுகள் பல ஸ்தம்பித்துள்ளன.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம் காரணமாக பிரித்தானியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 3,300 விமானங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சிகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என உலகம் முழுவதும் ஸ்தம்பித்த நிலையால் மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடிகள் முதல் சிறு கடைகள் வரையில் மூடப்படும் நிலை அல்லது நேரடி பண பரிவர்த்தனை மட்டும் அனுமதித்துள்ளனர். அமெரிக்காவில் அலாஸ்கா, அரிசோனா, இந்தியானா, மினசோட்டா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் ஓஹியோ பகுதிகளில் அவசர சேவை இலக்கம் மொத்தமாக முடங்கியது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் முதன்மை அதிகாரிகள் குழுவானது அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், ஆலோசனையும் மேற்கொண்டனர். ஆனால் பிரதமர் ஸ்டார்மர் இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பில் இருந்ததால், கோப்ரா கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
உலகம் மீள சில நாட்களாகலாம்
விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளதுடன், அடுத்த விமான சேவை எப்போது என்ற குழப்பத்தில் பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணைய பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான CrowdStrike தெரிவிக்கையில், வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்றை புதுப்பிக்கும் நிலையிலேயே உலகம் மொத்தம் மென்பொருள் முடக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.
புதுப்பித்த அந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது தவறானது என்றும் கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், CrowdStrike நிறுவனமானது தங்களின் சேவைகளுக்கு பெரும்பாலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தையே நம்பியிருந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த மென்பொருள் முடக்கமானது பாதுகாப்பு வீழ்ச்சி அல்லது தாக்குதல் அல்ல என்றும் CrowdStrike அறிக்கை ஒன்றில் விளக்கமளித்துள்ளது.
நடந்த தவற்றை கண்டறிந்து, உறுதி செய்யப்பட்டு, சரி செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கையில், இந்த சிக்கலில் இருந்து உலகம் மீள சில நாட்களாகலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
பிழையான அந்த மென்பொருளை நீக்க பல நாட்களாகலாம் என்றே நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |