உருவானது புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு! தடுப்பூசிக்கு கட்டுப்படாது என விஞ்ஞானிகள் அச்சம்: எந்த நாட்டில் தோன்றியது?
புதிததாக தோன்றியுள்ள கொரோனா வைரஸ் மாறுபாடு தடுப்பூசிக்கு கட்டுப்படாது என அஞ்சுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் தோன்றியதாகக் கருதப்படும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என மாறுபாடு குறித்து விஞ்ஞானிகள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களாம்.
மேலும், இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசிக்கு கட்டுப்பாடது என விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
ஆனால் அதிகாரிகள் இந்த புதிய கொரோனா மாறுபாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என என்று அரசாங்கத்தின் SAGE நிபுணர் குழு உறுப்பினர் கூறினார்.
ஆயிரக்கணக்கான கொரோனா வகைகள் உள்ளன, இது எல்லா நேரத்திலும் மாறிவரும் வைரஸ் என SAGE நிபுணர் குழு உறுப்பினர் கூறினார்.
பிரித்தானியா பயண பட்டியலில் பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகளை தேவைப்பட்டால் சிவப்பு பட்டியலில் சேர்க்க அரசாங்கம் தயங்காது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்தை தொடர்ந்து புதிய கொரோனா மாறுபாடு குறித்து அறிக்கை வெளிவந்துள்ளது.
அதேசமயம் புதுப்பிக்கப்பட்ட பிரித்தானியாவின் பயண பட்டியலை பிரித்தானியா அமைச்சர்கள் இன்று வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.