நீண்ட நாள் காதலியுடன் பிரபல பிரித்தானிய நடிகருக்கு திருமண நிச்சயதார்த்தம்
பிரபல பிரித்தானிய நடிகர் டாம் ஹாலண்ட் மற்றும் நடிகை ஸிண்டயா ஜோடி திருமண நிச்சயம் செய்து கொண்டனர்.
ஸ்பைடர்மேன் ஜோடி
ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் 28 வயதான டாம் ஹாலண்ட் (Tom Holland).
பிரித்தானியாவைச் சேர்ந்த ஹாலண்டும், அவருக்கு ஜோடியாக ஸ்பைடர்மேன் படத்தில் நடித்த ஜெண்டயாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
ஆரம்பத்தில் நண்பர்கள் எனக் கூறிக்கொண்ட இந்த ஜோடி, 2021ஆம் ஆண்டில் தங்களது காதலை வெளிப்படுத்தியது.
திருமண நிச்சயதார்த்தம்
இந்த நிலையில் ஹாலண்ட் - ஜெண்டயா ஜோடி தங்கள் காதல் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அதாவது, இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த இருவரின் ரசிகர்களும் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2011ஆம் ஆண்டில் இசை ஆல்பத்தில் நடித்த ஜெண்டயா, தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அதே சமயம் 2017யில் வெளியான ஸ்பைடர் மேன் ஹாம்கம்மிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜெண்டயா, Dune மற்றும் Dune 2 படங்கள் மூலம் உச்ச நடிகையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |