HDFC வங்கியில் ரூ.28 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு?
HDFC வங்கியில் ரூ.28 லட்சத்திற்கு வீட்டுக்கடன் வாங்கினால் 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது நிதித் திறன், வருமான ஆதாரம் போன்ற விடயங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
மேலும், ஒருவர் கடன் வாங்கும்போது அவரது நிதி நிலையுடன் கடன் வாங்குபவரின் வயதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
EMI எவ்வளவு?
இப்போது நாம் HDFC வங்கியில் ரூ.28 லட்சத்திற்கு வீட்டுக்கடன் வாங்கினால் 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஒருவருக்கு ஏற்கனவே கடன் இல்லையென்றால் HDFC வங்கியில் 20 ஆண்டுகளுக்கு ரூ.28 லட்சம் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், ஆண்டுக்கு 8.75% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனைப் பெறலாம்.
இதற்கு, கடன் வாங்குபவரின் மாத வருமானம் ரூ.50,000-த்திற்கு மேல் இருக்க வேண்டும். இதன்படி HDFC வங்கியில் ரூ.28 லட்சத்தை கடனாக பெறலாம்.
HDFC வங்கி வீட்டுக் கடன் கால்குலேட்டரின் படி, 20 ஆண்டுகளுக்கு ரூ.28 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், மாதம் ரூ.24,744 -யை இஎம்ஐயாகச் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |