SBI -ல் ரூ.45 லட்சத்திற்கு Home Loan வாங்கினால்.. 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு?
ஸ்டேட் பாங்க் (SBI) வங்கியில் ரூ.45 லட்சத்திற்கு வீட்டுக் கடன் வாங்கினால் 20 வருடத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர்.
SBI -ல் Home Loan
EMI தொகை வட்டியை பொறுத்து தான் மாறும். வட்டி விகிதமானது CIBIL மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுவாக CIBIL மதிப்பெண்ணானது 300 மற்றும் 900 புள்ளிகளுக்கு இடையே கணக்கிடப்படுகிறது. ஆனால், நிபுணர்கள் கூறியதன்படி CIBIL மதிப்பெண் குறைந்தபட்சம் 750-க்கு மேல் இருந்தால் எளிதாக கடன் பெறலாம்.
ஆனால், CIBIL மதிப்பெண் மோசமாக இருந்தால் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எஸ்பிஐ வங்கி இணையதளத்தின் படி CIBIL மதிப்பெண் 800 -க்கு மேல் இருந்தால் 9.15 சதவீதம் வட்டி விகிதம் இருக்கும்.
இதுவே, 700 முதல் 799 வரை CIBIL மதிப்பெண் இருந்தால் 9.25 சதவீதமாகவும், 700 முதல் 749 வரை இருந்தால் 9.35 சதவீதம் ஆகவும், 650 முதல் 699 வரை இருந்தால் 9.45 சதவீதமாகவும் இருக்கும்.
அதோடு எஸ்பிஐயில் செயலாக்கக் கட்டணம் (Processing Fee) 0.35 முதல் 0.50 சதவீதம் ஆகும். இதற்கு GST -யும் பொருந்தும்.
EMI எவ்வளவு?
தற்போது நாம் CIBIL மதிப்பெண் 800 என்று வைத்துக் கொண்டால், வட்டி விகிதம் (Interest rate) 9.15 சதவீதம் ஆகும்.
இந்த வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு ரூ.45 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் மாதம் ரூ.40,923 EMI செலுத்த வேண்டும்.
அதன்படி 20 ஆண்டுகளில் வங்கிக்கு வட்டியாக 53,21,472 ரூபாய் செலுத்த வேண்டும். நாம் திரும்ப செலுத்தும் மொத்த தொகை ரூ. 98,21,472 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |