Home Loan வாங்கப்போறீங்களா., வீட்டுக்கடன் வட்டி குறித்த முழுமையான தகவல் இதோ

Interest Rate
By Ragavan Jan 01, 2026 10:30 AM GMT
Report

வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. அந்தக் கனவை நனவாக்குவதற்கான முக்கியமான வழி Home Loan எடுப்பது தான்.

வீட்டு கடன் பெறும் போது, வட்டி விகிதம் (Interest Rate) மிக முக்கியமான காரணியாகும். வட்டி விகிதம் குறைந்தால், மாதாந்திர EMI குறையும். அதிகரித்தால், கடன் சுமை பெருகும்.

முழுக்க முழுக்க கடனை நம்பி வீடு வாங்குவது சரியான முடிவு அல்ல. சேமிப்பில் ஒரு பகுதியை செலுத்தி, மீதியை கடனாக எடுப்பதே சிறந்தது.

பங்குச் சந்தை என்றால் என்ன? பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

பங்குச் சந்தை என்றால் என்ன? பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

விண்ணப்ப நிபந்தனைகள்:

வீட்டின் பெயர் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும்.

வருமானம் ஈட்டுபவர் வேறு பெயரில் இருந்தால், அவர் co-applicant-ஆக சேர்க்கப்பட வேண்டும்.

வயது 60-க்குள் இருக்க வேண்டும் - வயதுக்கு ஏற்ப repayment tenure குறையும்.

Home Loan Interest in Tamil

சிபில் ஸ்கோர்:

இதற்கு முன்பு எடுத்த எந்தக் கடனும் சிபில் ஸ்கோரில் காட்டப்படும். நல்ல ஸ்கோர் இருந்தால் கடன் எளிதில் கிடைக்கும். விண்ணப்பதாரர் மற்றும் co-applicant இருவரின் ஸ்கோரும் பரிசீலிக்கப்படும்.

CIBIL Score-உம் வங்கி கடனும்; இது அதிகரிக்க என்ன செய்யலாம்?

CIBIL Score-உம் வங்கி கடனும்; இது அதிகரிக்க என்ன செய்யலாம்?

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார், பான் கார்டு
  • வருமான வரி தாக்கல் (அல்லது NIL return)
  • 3-6 மாத salary slip / தொழிலாளர்களுக்கு bank statement
  • Legal Scrutiny Report - பட்டா, EC விவரங்களுடன் வக்கீலிடம் பெற வேண்டும்
  • DTCP approval - நிலம் விவசாய நிலமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த DTCP approval வேண்டும்
  • Cost of Estimation - அரசு அங்கீகரித்த என்ஜினீயர் சான்றிதழ் அளிக்கப்படவேண்டும்
  • MOD (Memorandum of Deposit) - வாங்கும் இடத்தை security ஆக வங்கிக்கு பதிவு செய்ய வேண்டும்

EMI விதிகள்:

வருமானத்தின் 40 சதவீதம் மட்டுமே EMI-க்கு கணக்கிடப்படும். Tenure (கடனை திருப்பி செலுத்தும் காலம்) வயதுக்கு ஏற்ப மாறும்.

கடன் வழங்கும் நடைமுறை:

Loan sanction ஆனதும் 3 நாட்களில் தொகை கணக்கில் வரும்.

வீடு கட்டும் loan என்றால் 3 தவணைகளில் 6 மாத இடைவெளியில் வழங்கப்படும்.

Flat அல்லது Apartment வாங்கினால், வங்கி DD எடுத்து பதிவு நாளன்று விற்பவரிடம் கொடுக்கும்.

பணக்காரர் ஆக வேண்டுமா? Mutual Fund முழுவிபரம்: லட்சக்கணக்கில் லாபம் பெறுங்கள்!

பணக்காரர் ஆக வேண்டுமா? Mutual Fund முழுவிபரம்: லட்சக்கணக்கில் லாபம் பெறுங்கள்!

வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

முன்கூட்டியே loan close செய்யும் வசதி, அதற்கான கட்டணங்கள் பற்றி வங்கியிடம் தெளிவாக கேட்க வேண்டும்.

15 ஆண்டுக்குள் கடனை கட்டி முடிப்பதே நல்லது. நீண்ட tenure அதிக வட்டி சுமை தரும்.

குறைந்தது 30 சதவீதம் down payment சேமிப்பில் இருந்து செலுத்துவது பாதுகாப்பானது. 

இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றினால், வீட்டுக்கடன் பெறுவதும், அதை முடிப்பதும் எளிதாகும்.

Home Loan Interest in Tamil

2025 நிலவரப்படி, இந்தியாவில் வீட்டு கடன் வட்டி விகிதங்கள் குறைந்துள்ளதால், வீடு வாங்கும் திறன் (Housing Affordability) அதிகரித்துள்ளது.

2025-ல் வட்டி விகித நிலவரம்

Bank of India, Bank of Maharashtra, Central Bank of India ஆகியவை ஆண்டுக்கு 7.10 சதவீதம் முதல் வட்டி விகிதம் வழங்குகின்றன.

Union Bank of India, Bank of Baroda ஆண்டுக்கு 7.45 சதவீதம் முதல் வட்டி விகிதம் வழங்குகின்றன.

Kotak Mahindra Bank ஆண்டுக்கு 7.70 சதவீதம் முதல் வட்டி விகிதம் வழங்குகிறது.

PSU Banks (அரசு வங்கிகள்) புதிய Home Loan வழங்கலில் 47 சதவீதம் பங்கு வகிக்கின்றன. அவற்றின் சராசரி வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.10 - 7.70 சதவீதத்திற்கு இடையே உள்ளது.

அதிகரித்து வரும் UPI மோசடிகள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அதிகரித்து வரும் UPI மோசடிகள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

RBI Repo Rate தாக்கம்

2025-ல் RBI Repo Rate 125 bps குறைக்கப்பட்டது. இதனால், floating rate loans பெற்றவர்கள் EMI குறைவால் பெரும் நிவாரணம் பெற்றனர். Repo-linked loans (RLLR) உடனடியாக வட்டி குறைப்பின் பயனை பெற்றன.

வீட்டுக்கடன் சந்தை வளர்ச்சி

2025 செப்டம்பர் நிலவரப்படி, Retail Credit ரூ.144 லட்சம் கோடி. அதில் Housing Loans ரூ.41 லட்சம் கோடி (29% பங்கு).

ரூ.5.5 லட்சம் கோடி மதிப்பில் புதிய வீட்டுக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

சராசரியான வீட்டுக்கடன் அளவு ரூ.32 லட்சம்.

வட்டி விகித வகைகள்

  • Fixed Rate Loan - ஆரம்பத்தில் Fixed வட்டி இருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு floating rate-ஆக மாறும்.
  • Floating Rate Loan - RBI Repo Rate, EBLR அடிப்படையில் மாறும்.
  • Hybrid Loans - சில காலம் fixed, பின்னர் floating-ஆக மாறும்

Home Loan Interest in Tamil

EMI கணக்கீடு

உதாரணம்:

Loan Amount – ரூ.30 லட்சம்

Interest Rate – ஆண்டுக்கு 7.35%

Tenure – 20 ஆண்டுகள்

EMI - ரூ.23,800

அதாவது, நீங்கள் 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும்படி 7.35 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் கடன் வாங்கினால், மாதம் ரூ.23,800 தவணையாக கட்டவேண்டும்.

வட்டி விகிதம் 0.25% கூடினால், EMI சுமார் ரூ.500 அதிகரிக்கும்.

பான் கார்டு பயன்கள்; எதற்கெல்லாம் கட்டாயம்? முழு விவரங்கள்

பான் கார்டு பயன்கள்; எதற்கெல்லாம் கட்டாயம்? முழு விவரங்கள்

Borrower Profile தாக்கம்

வட்டி விகிதம், ஒருவரின் Credit Score, Occupation, Employer Profile ஆகியவற்றின் அடிப்படையில் மாறும்.

Credit Score 751-க்கு மேல் இருந்தால் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவராக இருந்தால் (Private Sector Employees) சில வங்கிகளில் அதிக வட்டி விதிக்கப்படும்.

பெண்களுக்கு (Women Borrowers) சில வங்கிகள் சலுகைகள் (concessional rate) வழங்குகின்றன.

அனைத்து கடன்களையும் போல வீட்டுக்கடனுக்கும் அனைத்து வங்கிகளிலும் Processing Fees இருக்கும்.

Home Loan Interest in Tamil

2026 வீட்டுக்கடன் வட்டி விகிதம்

2026-ல் பெரிய வட்டி குறைப்புகள் சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய அளவு easing மட்டுமே சாத்தியம் என கூறப்படுகிறது.

புதிதாக வீட்டுக்கடன் வாங்குபவர்கள் இப்போது loan பெறுவது சிறந்தது என கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஒருமுறை வாங்கியவர்கள் Repo-linked loans-க்கு மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆதாரில் இனி மொபைல் போன் மூலமே திருத்தங்கள் செய்யலாம் - எப்படி செய்வது?

ஆதாரில் இனி மொபைல் போன் மூலமே திருத்தங்கள் செய்யலாம் - எப்படி செய்வது?

Home Loan Interest என்பது வீடு வாங்கும் திறனை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். 2025ல் வட்டி விகிதங்கள் குறைந்ததால், வீடு வாங்கும் திறன் பெரும்பாலான நகரங்களில் மேம்பட்டுள்ளது. RBI Repo Rate குறைப்புகள், PSU வங்கிகளின் பங்கு, Affordability Index ஆகியவை Borrowers-க்கு நன்மை செய்துள்ளன. 

ஆனால், 2026-ல் பெரிய வட்டி குறைப்புகள் சாத்தியமில்லை. எனவே, கடன் பெற விரும்புவோர் இப்போதே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US