வீட்டுக் கடன் ரூ. 75 லட்சத்தை பெற்றால்... அதற்கான 20 வருட EMI எவ்வளவு தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதில் பெரும்பாலானோர் அனைத்து பணத்தையும் வழங்குவதற்கு பதிலாக வங்கிக் கடனையே நம்பியிருக்கின்றனர்.
இப்படிக் கடன் வாங்கி வீடு கட்ட விரும்புவோர் மத்தியில் பல்வேறு அடிப்படையான சந்தேகங்கள் உள்ளன.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) அதன் மானிட்டரி பாலிசி மீட்டிங் (MPC) நடத்தும்போதெல்லாம் நடுத்தர குடும்ப நபர்களுக்கு அதன் முடிவு என்னவாக இருக்கும் என்ற எண்ணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்.
குறித்த கூட்டம் நடைபெறும் போதெல்லாம் எடுக்கக்கூடிய ரெப்போ விகிதம் குறித்த முடிவு அவர்களது வீட்டுக் கடன் EMI தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் ஒன்று.
ரெப்போ விகிதம் என்பது கமர்ஷியல் வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கும் வட்டி விகிதம் ஆகும்.
ரெப்போ விகிதம் அதிகமாக இருந்தால் கடன் வழங்குனர்கள் கடனின் வட்டியை அதிகரிப்பது வழக்கம்.
இதனால் வீட்டுக்கடன் பெற்றவர்கள் அதிக EMI தொகை செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனினும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த ஒரு வருடமாக ரிப்போ விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தவில்லை.
அந்தவகையில் 70 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதங்கள் வசூல் செய்யப்படுகின்றன என்பது குறித்தும் 20 வருடத்திற்கான EMI எவ்வளவு என்பது என்ன என்று குறித்தும் விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
75 லட்ச ரூபாய் கடனை 8.50 சதவீதம் முதல் 9.85 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
அதாவது 20 வருட கால வீட்டுக் கடனுக்கான EMI, 65,087 ரூபாய் முதல் 71,633 ரூபாய் அறவிடப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
75 லட்ச ரூபாய் கடனை 8.40 சதவீதம் முதல் 10.15 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
அதாவது 20 வருட கால வீட்டுக் கடனுக்கான EMI, 64,613 ரூபாய் முதல் 73,124 ரூபாய் அறவிடப்படுகிறது.
கனரா வங்கி
75 லட்ச ரூபாய் கடனை 8.45 சதவீதம் முதல் 11.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
அதாவது 20 வருட கால வீட்டுக் கடனுக்கான EMI, 64,850 ரூபாய் முதல் 78,694 ரூபாய் அறவிடப்படுகிறது.
ICICI வங்கி
75 லட்ச ரூபாய் கடனை 8.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
அதாவது 20 வருட கால வீட்டுக் கடனுக்கான EMI, 66,278 ரூபாய் அறவிடப்படுகிறது.
HDFC வங்கி
75 லட்ச ரூபாய் கடனை 8.75 சதவீதம் முதல் வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
அதாவது 20 வருட கால வீட்டுக் கடனுக்கான EMI, 66,278 ரூபாய் அறவிடப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கி
75 லட்ச ரூபாய் கடனை 8.75 சதவீதம் முதல் 13.30 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
அதாவது 20 வருட கால வீட்டுக் கடனுக்கான EMI, 66.278 ரூபாய் முதல் 89,476 ரூபாய் அறவிடப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |