முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து என்பதால் நெல்லிக்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.
அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய்- 10
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
தயாரிக்கும் முறை
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.
அடுத்து இதில் நெல்லிக்காய் அரைத்த சாற்றை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
நெல்லிக்காய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிடவும்.
இறுதியாக, கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |