வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பீட்ரூட் கொலாஜின் கிரீம்: எப்படி தயாரிப்பது?
வயது ஆக ஆக முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பீட்ரூட் கொலாஜின் கிரீமை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- கற்றாழை- 2 ஸ்பூன்
- கிளிசரின்- 5 சொட்டு
தயாரிக்கும் முறை
முதலில் பீட்ரூட்டை தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
அடுத்து இதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து பின் அதனுடன் கிளிசரின் சேர்த்து கிளறவும்.
இதற்கடுத்து இது நன்கு கெட்டியானதும் மிக்ஸியில் அடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.
இறுதியாக வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |