முகத்தை பளிச்சென்று மாற்ற உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகத்தை பளிச்சென்று மாற்ற பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் பீட்ரூட்டை கழுவி அதன் தோலை சீவி நன்கு துருவி எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு பிழிந்து அதன் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு, கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.

இதனை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவிக்கொண்டு தூங்க செல்ல வேண்டும்.
பின்னர் காலையில் எழுந்து முகத்தை குளிர்ந்த நீரால் அலசிக்கொள்ளவும்.
இந்த கலவையை தொடர்ந்து தினமும் இரவில் பயன்படுத்தி வந்தால் முகம் நன்கு பளிச்சென்று மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |