முடியை அடர்த்தியாக்க உதவும் காபி தூள்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அந்தவகையில், முடியை அடர்த்தியாக்க காபி தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- காபி தூள்- 2 ஸ்பூன்
- முட்டை- 1
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை தலைமுடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி, குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- காபி தூள்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து, அத்துடன் காபித் தூளை சேர்த்து குறைவான தீயில் சூடேற்ற வேண்டும்.
பின் அதை வடிகட்டி, வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிக்கும் முன் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, ஊற வைக்க வேண்டும்.
பின்பு மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |