குளிர்காலத்தில் சரும வறட்சியைத் தடுக்க உதவும் ரோஜாப்பூ.., எப்படி பயன்படுத்துவது?
Home Made Dried Rose Petals Face Masks- குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்றால் சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதம் குறைவதால் சரும வறட்சி, அரிப்பு, கரடுமுரடான தன்மை மற்றும் பொலிவின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே, குளிர்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதம் அளிப்பது அவசியம்.
அதன்படி, உலர்ந்த ரோஜா இதழ்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
அந்தவகையில், குளிர்காலத்தில் சரும வறட்சியைத் தடுக்க உதவும் 5 ரோஜாப்பூ பேஸ்மாஸ்க்கை வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்டுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- உலர்ந்த ரோஜா இதழ்கள்- ஒரு கைப்பிடி
- பால்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி உலர்ந்த ரோஜா இதழ்களை எடுத்து கொள்ளவும்.

பின் அதனுடன் பால் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல் அரைக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- உலர்ந்த ரோஜா இதழ்கள்- ஒரு கைப்பிடி
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உலர்ந்த ரோஜா இதழ்களை எடுத்து கைகளால் நன்றாக நசுக்கவும்.
பின் அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.
இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவடன் மிருதுவாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |