முகப்பருவை நிரந்தரமாக நீக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முகப்பரு தான்.
என்னதான் நம் முகம் பொலிவாக இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.
முகப்பரு என்பது சருமத் துளைகளில் எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அடைபடுவதால் ஏற்படும் பொதுவான தோல் பிரச்சனையாகும்.
இது ஹார்மோன் மாற்றம், மன அழுத்தம், மற்றும் முறையற்ற தோல் பராமரிப்பால் உண்டாகிறது.
சரியான முகச் சுத்திகரிப்பு, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் தேவையெனில் மருத்துவ சிகிச்சை மூலம் இதைத் தடுக்கலாம்.
அந்தவகையில், முகப்பருவை நிரந்தரமாக நீக்க உதவும் பேஸ்பேக்கை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ்- 2 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஓட்ஸ் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் தூள், கெட்டி தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே உலரவைக்கவும்.
இதற்கடுத்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பருக்கள் நிரந்தரமாக நீங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |