கருப்பான முகத்தை வெள்ளையாக்க உதவும் Facepack.., எப்படி தயாரிப்பது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
ஆனால், முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகப்பொலிவை அதிகரிக்க உதவும் Facepack குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள் பேக்- ½ ஸ்பூன்
- பால்- 5 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவி, மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 1 ஸ்பூன்
- தக்காளி- 1
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
பின் 10 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |