ஹீரோயின் போல முகம் வெள்ளையாக மாற உதவும் பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் நினைப்பார்கள்.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளப்பாக இந்த ஒரு பேஸ்பேக் போதும்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- தேன்- 2 ஸ்பூன்
- தக்காளி- 1
தயாரிக்கும் முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி அதனை நன்கு அரைத்து சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
பின் உருளைக்கிழங்கு சாற்றை தேனுடன் நன்றாக கலக்கவும்.
பின்னர் 10 நிமிடம் கழித்து அதில் தக்காளியை நன்கு அரைத்து அதன் சாறு சேர்த்து கலக்கவும்.
இதற்கடுத்து அனைத்தையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
இறுதியாக 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரினால் கழுவவும்.
இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து 3 வாரங்கள் பயன்படுத்தி வர முகம் நன்கு பொலிவாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |