வயதானாலும் இளமையாக இருக்க இந்த 2 பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக வயது அதிகரித்து செல்லும்போது முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
இதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க இந்த 2 பொருளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- ½ ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
பின் இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.
அடுத்து, கைகளால் முகத்தை லேசாக மசாஜ் செய்து, பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

இதனை, தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் பயன்படுதலாம்.
இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், சருமத்தில் இரத்த ஓட்டம் மேம்பட்டு சுருக்கங்களும் குறையும்.
மேலும் சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை தரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |