முகத்தில் சுருக்கம் விழாமல் என்றும் இளமையாக இருக்க உதவும் Facepack.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவரும் வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் விருப்பம்தான்.
அந்தவகையில் வயதானாலும் இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும் பேஸ்பேக் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
பழுத்த வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கி பிசைந்து தேன் சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும்.
இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும்.
20 நிமிடங்களுக்கு பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.
2. தேவையான பொருட்கள்
- அவக்கோடா- 1
- கிரீன் ட- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
பழுத்த அவக்கோடா பழத்தின் சதைப்பகுதியை எடுத்து மசித்துக்கொள்ளவும்.
சிறிது கிரீன் டீ தயார் செய்து ஆறியதும் மசித்த அவக்கோடா பழத்தில் கிரீன் டீ சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் ஒன்றாக கலக்கவும்.
இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின் தண்ணீரில் கழுவுவதற்கு முன் 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். இதனை வாரத்தில் 3 முறை பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |