முகம் தங்கம் போல் ஜொலிக்க.., 1000 ஆண்டுகள் பழமையான மாய்ஸ்ச்சரைஸர்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
சருமத்திற்கு மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவது நாள்முழுவதும் சருமம் வறண்டு போகாமல் ஹைட்ரேட்டாக இருக்க உதவுகிறது.
கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த மாய்ஸ்ச்சரைஸர் விரைவிலே சருமத்தை வறட்சி அடைய செய்து விடுகிறது.
ஆனால் 100 ஆண்டுகள் பழமையான இந்த நெய் மாய்ஸ்ச்சரைஸர் நாள் முழுவதும் சருமத்தை பொலிவாகவும், ஹைட்ரேட்டாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
இந்த மாய்ஸ்ச்சரைஸருக்கு ஷதா தௌத க்ரிதா (Shata Dhauta Ghrita) என்ற பழமையான பெயரும் உண்டு. இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய் - 100g
- தண்ணீர் - 1 கப்
- மஞ்சிஸ்டா பொடி - 1 ஸ்பூன்
- அதிமதுரம் - 1 ஸ்பூன்
- துளசி பொடி - ¼ ஸ்பூன்
- செம்பு தாம்பலம் - 1
- செம்பு டம்ளர் - 1
செய்முறை
முதலில் ஒரு செம்பு தாம்பலத்தைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்த தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சிஸ்டா பொடி, அதிமதுரப் பொடி, துளசி பொடி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின் செம்மு தாம்பலத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் நீரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து நெய்யில் விட்டு, செம்பு டம்ளரைக் கொண்டு வட்ட வடிவில் நன்கு தேய்க்க வேண்டும்.
ஊற்றிய தண்ணீரை நெய் முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறது அடுத்த ஸ்பூன் தண்ணணீரை ஊற்றித் தேய்க்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து 100 முறை தண்ணீர் ஊற்றி தேய்த்தால் ஸ்மூத்தான மாயஸ்சரைஸர் க்ரீம் கிடைக்கும்.
நெய் முழுசாக க்ரீமாக மாறியிருக்கும். இதுதான் 1000 ஆண்டுகள் பழமையான Shata Dhauta Ghrita என்னும் மாயஸ்ச்சரைஸர்.
பயன்படுத்தும் முறை
முகத்தை சுத்தம் செய்து விட்டு, நேரடியாக மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவது போல இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.
நாள் முழுக்க சருமத்தை மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும். குழந்தைகளுக்குக் கூட இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.
இந்த மாய்ஸ்ச்சரைஸரை சருமத்தில் அப்ளை செய்யும் போது சருமத்தில் இருக்கிற 7 வகை லேயர்களுக்கு உள்ளேயும் ஊடுருவிச் செல்லும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |