முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் பழமையான முறை.., என்ன தெரியுமா?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை முடி உதிர்தல்.
தூக்கமின்மை, மருந்துகள் எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால் முடி வலுவிழந்து உடைந்து விடுகிறது.
இந்நிலையில், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பழங்காலத்தில் பெண்கள் பயன்படுத்திய இயற்கை முறைகள் குறித்து பார்க்கலாம்.

1. சப்போட்டா எண்ணெய்
சப்போட்டா விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், பொடுகு மற்றும் எரிச்சலூட்டும் உச்சந்தலைப் பிரச்சனைகளைப் போக்கவும், உச்சந்தலையை சீரமைக்கவும் பயன்படுகிறது.
2. கற்றாழை
இயற்கை கற்றாழை ஜெல் முடியை வலுப்படுத்தவும், எண்ணெய் பசையுள்ள இழைகளைக் கட்டுப்படுத்தவும் மற்றும் உச்சந்தலையில் அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
3. புளித்த அரிசி நீர்
இதில் உள்ள அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்ற தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.
4. முட்டை
முட்டைகளில் உள்ள வைட்டமின்கள் ஏ, ஈ, பயோட்டின் மற்றும் ஃபோலேட் ஆகியவை அடர்த்தியான கூந்தல் மற்றும் ஆரோக்கியமான உச்சந்தலையை அடைய உதவுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |