கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வெந்தய சீரம்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வெந்தய சீரத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கருஞ்சீரகம் 1 ஸ்பூன்
- தண்ணீர்- 1 கப்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
பின் இதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

அடுத்து இதனை ஆறவைத்து வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதனை தினமும் தலைமுடியில் ஸ்பிரே செய்து மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதனை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |