இயற்கை முறையில் Hair Straightening cream: தயாரிப்பது எப்படி?
பலரும் சுருள் முடி பிடிக்காமல் அழகு நிலையங்களுக்கு சென்று அளவிற்கு அதிகம் செலவு செய்து முடியை நேராக மாற்றிக்கொள்கிறார்கள்.
நமது இயற்கை தலைமுடியின் தோற்றத்தை மாற்றி அமைக்க ரசாயன கலவை கொண்ட பொருட்களை தலைமுடியில் பயன்படுத்துவதன் மூலம் நமது முடிக்கும் பலவிதமான பாதிப்புகள் உண்டாகின்றன.
எனவே அழகு நிலையங்களுக்கு சென்று ரசாயன கலவை கொண்டு தலைமுடியை Straightening செய்வதற்கு பதிலாக வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு எப்படி Straightening cream செய்வதென்று பார்ப்போம்.
Spa and Salon
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் - 1 கப்
- எலுமிச்சை பழம்-2
- சோள மாவு- 2 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 டீஸ்பூன்
செய்முறை
தேங்காய் துருவலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக 2 எலுமிச்சம் பழங்களை நறுக்கி எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும். ஒரு பௌலில் 2 ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அது கட்டி ஆகிவிடும் என்பதால் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றியவாறு கலக்க வேண்டும்.
நன்றாக கலந்த பிறகு அதில் தேங்காய் பாலை ஊற்றி மறுபடியும் கலக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு அதை ஒரு பாத்திரத்தை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து 2-3 நிமிடம் வைத்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
சிறிது கெட்டியான பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அது கிரீம் போன்ற பதத்திற்கு வரும் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக கலந்து கிரீம் பதத்திற்கு வந்த பிறகு 2 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது ஸ்ட்ரைட்னிங் கிரீம் தயாராகிவிட்டது.
பயன்படுத்தும் முறை
முதலில் தலைமுடியை நன்கு சிக்கு எடுத்து தயார் படுத்தி கொள்ளவும்.
பிறகு முடியை சிறிது சிறிதாக எடுத்து இந்த க்ரீமை முடியில் தடவ வேண்டும்.
ஒவ்வொரு பிரிவாக எடுத்து தடவி பிறகு முழுவதுமாக தலை முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு தலையை அலசி விட வேண்டும்.
அதிகமாக சுருள் முடி இருப்பவர்கள் இந்த பேக்கை வாரத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தால் முடியின் தன்மையில் நல்ல மாற்றம் தென்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |