உடனடி முகப்பொலிவை அதிகரிக்க உதவும் தேன்.., எப்படி பயன்படுத்துவது?
வெயில் காலம் என்றாலே நம் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், உடனடி முகப்பொலிவை அதிகரிக்க தேனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- சிறிதளவு
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் சிறிது ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் 1-2 முறை பயன்படுத்தி வர முகம் உடனடி பொலிவு பெரும்.
2. தேவையான பொருட்கள்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- தேன்- 2 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் காபித் தூளை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |